அரசர் சார்லஸ் முடிசூட்டு விழா: தங்க மகுடம், இழுப்பதற்கு 8 குதிரைகள் - ஒரு ரதத்தில் இத்தனை வேலைப்பாடுகளா?

இந்த இரண்டு தங்க ரதங்கள்தான் அரசர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. மகாராணி எலிசபெத் உயிரோடு இருந்தபோது தயார் செய்யப்பட்ட வைரவிழா அரச ரதம் தற்போது அரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியை லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கு அழைத்து செல்லவுள்ளது.

இந்த வைரவிழா ரதம் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. 2014ஆம் ஆண்டு ராண் இரண்டாம் எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதுமாதிரியான வரலாற்று ரீதியிலான நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இதற்கு முன்பு கிடைக்கவில்லை. இந்த 5 மீட்டர் நீள ரதத்தின் எடை 3 டன் கிலோவுக்கு அதிகம்.

ரதத்தின் மேல்புறத்தில் தங்க மகுடம் உள்ளது. 18ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அரச கப்பற்படையின் புகழ்பெற்ற எச்.எம்.எஸ். விக்டரி மரக்கட்டைகள் இந்த ரதத்தை செதுக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. ( முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: