'பொன்னியின் செல்வன்' ராஜராஜ சோழன் யார்?

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வனான ராஜராஜசோழன் யார்?
'பொன்னியின் செல்வன்' ராஜராஜ சோழன் யார்?

புகழ் பெற்ற சோழ மன்னர்கள் வரிசையில் ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திரச் சோழனுக்கும் பிரதான இடம் உண்டு.

கடல் கடந்து பெற்ற வெற்றிகளுக்காக ராஜேந்திரச் சோழன் புகழப்பட்டாலும், ராஜராஜ சோழன் உருவாக்கிக் கொடுத்த விரிந்து பரந்த சாம்ராஜ்யமும் கப்பற்படையும்தான் அதன் பின்னணியில் இருந்தது. சோழ நாடு மிக அமைதியான, வளமான, வலிமையான நாடாக உருவெடுத்ததில் ராஜராஜசோழனின் பங்கு மிக முக்கியமானது.

சோழ மன்னனான சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையமான் வழிவந்த வானவன் மகாதேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் அருண்மொழி என்ற ராஜராஜசோழன். அருண்மொழியின் அண்ணனான ஆதித்த கரிகாலனுக்கே பட்டத்து இளவரசனாக முடிசூடப்பட்டது. ஆனால், ஆதித்த கரிகாலன் சதிசெய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இதையடுத்து, அருண்மொழியே சுந்தர சோழனுக்குப் பிறகு அரசனாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அவருடைய சித்தப்பனான மதுராந்தக உத்தமசோழனுக்கு நாட்டை ஆளும் விருப்பம் இருந்தது தெரிய வந்ததால், சுந்தர சோழன் மறைவுக்குப் பிறகு மதுராந்தக உத்தம சோழனுக்கே பட்டம் சூட்டப்பட்டது.

கி.பி. 970 முதல் கி.பி. 985 வரை மதுராந்தக உத்தமசோழன் ஆட்சி செய்ய, அருண்மொழி பட்டத்து இளவரசனாக இருந்தார். கி.பி. 985ல் மதுராந்தக உத்தம சோழன் மறைந்துவிட, அருண்மொழி சோழப் பேரரசனாக முடிசூட்டப்பட்டார். (முழு தகவல் காணொளியில்)

பொன்னியின் செல்வன் - ராஜராஜ சோழன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: