சுற்றி வளைக்கும் ஒத்திகையில் சீன ராணுவம் - நெருக்கடியில் தைவான்

காணொளிக் குறிப்பு, சுற்றி வளைக்கும் ஒத்திகையில் சீன ராணுவம்- அச்சத்தில் தைவான்
சுற்றி வளைக்கும் ஒத்திகையில் சீன ராணுவம் - நெருக்கடியில் தைவான்

தைவான் அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கும் விதமாக, தைவானைச் சுற்றி வளைக்கும் மூன்றுநாள் ஒத்திகையை சீன ராணுவம் தொடங்கியுள்ளது.

சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததும் சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்த சந்திப்பால் கோபமடைந்த சீனா, தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்குப் பயணம் செய்து திரும்பிய சில மணி நேரங்களிலேயே எல்லையில் போர் ஒத்திகைகளைத் தொடங்கியுள்ளது. தைவான் பாதுகாப்பு அமைச்சகம், 42 சீன ராணுவ விமானங்கள் மற்றும் 8 கப்பல்கள் தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்ததாகத் தெரிவித்தது.

இந்த கோடு சீன மற்றும் தைவான் பிரதேசங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பிளவு கோடு.

இந்த ராணுவப் பயிற்சிகள் "தைவான் தீவைச் சுற்றி ரோந்து மற்றும் முன்னேற்றங்களை ஒரே நேரத்தில் ஒழுங்கமைக்கும், சுற்றிவளைப்பு மற்றும் தடுப்பு தோரணையை வடிவமைக்கும்" என்று சீன அரசு ஊடகம் கூறியது.

"நீண்ட தூர ராக்கெட் பீரங்கிகள், கடற்படை அழிப்பான்கள், ஏவுகணை படகுகள், விமானப்படை போர் விமானங்கள், ஜாமர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் கருவிகள்" அனைத்தும் சீனாவின் ராணுவத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. (மேலும் தகவல்களுக்கு காணொளியை பார்க்கவும்)

தைவான் - சீனா விவகாரம்

பட மூலாதாரம், Reuters

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: