சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் பாதத்தை கழுவிய மத்திய பிரதேச முதலமைச்சர்

காணொளிக் குறிப்பு, சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் பாதத்தை கழுவிய மத்திய பிரதேச முதலமைச்சர்
சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் பாதத்தை கழுவிய மத்திய பிரதேச முதலமைச்சர்

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் இளைஞரிடம் ஒருவர் மனிதத்தன்மையற்ற வகையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் அவமதிக்கப்பட்ட இளைஞர் தஷ்மத் ராவத்தை தனது இல்லத்துக்கு அழைத்து அவரது காலைக் கழுவினார்.

வைரலான வீடியோவில், ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பாக சிறுநீர் கழித்த பிரவேஷ் ஷூக்லா மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்து அவமதித்த பிரவேஷ் ஷூக்லா பாஜகவைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

மத்திய பிரதேச முதலமைச்சர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: