பப்புவா நியூ கினி நிலச்சரிவு: 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம் - காணொளி

காணொளிக் குறிப்பு, பப்புவா நியூ கினி நிலச்சரிவு: 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம்

ஆஸ்திரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் பூமிக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மையத்தின் இயக்குநர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னர், சுமார் 670 பேர் பூமிக்கு அடியில் புதைந்துவிட்டதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதுவரை ஒரு டஜனுக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் அறுதியான எண்ணிக்கையை இன்னும் சொல்ல முடியவில்லை.

பப்புவா நியூ கினி நிலச்சரிவு

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)