கடைசி விவசாயி நல்லாண்டியின் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் ?

காணொளிக் குறிப்பு, 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
கடைசி விவசாயி நல்லாண்டியின் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் ?

'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து இத்திரைப்படத்தில் விவசாயியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நல்லாண்டியின் மகள் மொக்கத்தாயி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஊசி, குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு சென்றுதான் தனது தந்தை 'கடைசி விவசாயி' திரைப்படத்தில் நடித்திருந்தார். மத்திய அரசு அவருக்கும் தேசிய விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி என்கிறார் அவர்.

நல்லாண்டியின் மனைவி
படக்குறிப்பு, 'கடைசி விவசாயி ' திரைப்படத்துக்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மாயாண்டி கதாபாத்திரத்தை ஏற்று 'கடைசி விவசாயியாக' நடித்திருந்த நல்லாண்டியின் நடிப்பினை அனைவரும் பாராட்டியிருந்தனர்.

அந்தத் திரைப்படத்தில் கடைசி விவசாயியாகவே நல்லாண்டி வாழ்ந்து இருப்பதாகத் தெரிவித்தனர் அவரது குடும்பத்தினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: