இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது? - ரசிகர்கள் விமர்சனம்
தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இன்று காலை 9 மணிக்கு சிறப்புத் திரையிடலுடன் வெளியானது கமல் ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார்.
இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. பிறகு அதன் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு 2017இல் வெளியாக, மக்கள் மத்தியில் அது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கமல் ஹாசனின் ரசிகர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து, இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளனர்.

பட மூலாதாரம், LYCA PRODUCTIONS/X
சிலர் இந்தியன் படத்தின் திரைக்கதையை `இந்தியன் 2’ ஈடுசெய்யவில்லை என்கிறார்கள். சிலரோ இந்தியன் 3 படத்திற்கான “ட்ரெய்லர் ஷோ,” இது என்கிறார்கள்.
அனிருத்தின் இசை சிறப்பாக இருந்ததாகச் சிலர் கூற, சிலரோ ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையை ‘மிஸ்’ செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
'இந்தியன் தாத்தா' 28 ஆண்டுகள் கழித்து வந்துள்ளார். அவர் மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தாரா? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இணையான இசையை அனிருத் வழங்கியுள்ளாரா? முதல் காட்சி முடித்து வெளியே வந்த ரசிகர்கள் பிபிசியிடம் கூறியது என்ன?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



