சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் மாவு அரைக்கும் இயந்திரம்

காணொளிக் குறிப்பு, சுனில் இந்த மாவு ஆலையை சைக்கிள் பெடல்கள், கியர் இணைத்து தயாரித்துள்ளார்
சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் மாவு அரைக்கும் இயந்திரம்

மகாராஷ்டிராவில் 2016 ஆம் ஆண்டு நடந்த மின்வெட்டு ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டம் ஸ்ரீபத் தமங்காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுனில் ஷிண்டேவுக்கு சைக்கிள் பெடலைக் கொண்டு மாவு அரைக்கும் ஆலையை உருவாக்கும் யோசனை தோன்றியது.

மாவு அரைக்கும் இயந்திரம்

சுனில் இந்த மாவு ஆலையை சைக்கிள் பெடல்கள், கியர் மற்றும் அதனுடன் மாவு அரைக்கும் கல்லை இணைத்து தயாரித்துள்ளார்.மாவு மில் வடிவமைப்பில் நான்கு வருட சோதனைகளுக்குப் பிறகு, சுனில் அவற்றை வணிக அடிப்படையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)