மணிப்பூர் வாக்குச்சாவடியில் வெடித்த வன்முறை: துப்பாக்கிச்சூடு, இவிஎம் உடைப்பு
தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இன மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் வாக்குப்பதிவின்போது துப்பாக்கிச்சூடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைப்பு போன்ற சம்பவங்கள் அராங்கேறி இருக்கின்றன.
இரண்டு மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணிவரை அங்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. 67 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மணிப்பூர் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



