குஜராத்தில் 22 பேரை கடித்த 'ரேபிஸ்' நாய் - சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

காணொளிக் குறிப்பு, குஜராத்தில் 22 பேரை கடித்த 'ரேபிஸ்' நாய் - என்ன நடந்தது?
குஜராத்தில் 22 பேரை கடித்த 'ரேபிஸ்' நாய் - சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

குஜராத்தில் தெருவில் நிற்கும் ஒருவரை கடித்த நாயை ஒருவர் தடியால் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த நாய் ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் என்றும் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கோண்டல் பகுதியில் இந்த நாய் 22 பேரை கடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த காணொளி நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கோண்டல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)