காணொளி: சாலையில் தரையிறங்கிய விமானம் - புதுக்கோட்டையில் என்ன நடந்தது?
காணொளி: சாலையில் தரையிறங்கிய விமானம் - புதுக்கோட்டையில் என்ன நடந்தது?
வியாழக்கிழமை காலை சேலம் விமான நிலையத்திலிருந்து காரைக்குடி நோக்கிப் புறப்பட்ட பயிற்சி விமானம் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்டதாகவும் அதனுள் இருந்த பயிற்சியாளர், பைலட் மாணவர் ஆகியோர் காயமின்றி தப்பித்ததாகவும் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



