சிட்னி துப்பாக்கிச்சூடு நடந்த தருணத்தின் காட்சி

காணொளிக் குறிப்பு,
சிட்னி துப்பாக்கிச்சூடு நடந்த தருணத்தின் காட்சி

போண்டை கடற்கரையின் வடக்கு முனையில் உள்ள கேம்ப்பெல் பரேட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

கடற்கரையில் உள்ள பூங்காவில் மக்கள் ஹனுக்கா கொண்டாட்டத்தில் இருந்தபோது, இந்த பாலத்தில் இருந்து 2 பேர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த காட்சி தொடங்கிய 30 விநாடிகளில், வெள்ளை நிற பேண்ட் அணிந்திருந்தவர், பாலத்தில் இருந்து இறங்கி மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த காட்சி தொடங்கிய 2 நிமிடம், 50 விநாடிகளில், அங்கிருந்த ஒருவர் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவரை தடுப்பதை காண முடிந்தது. அவரிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி அவரை குறிவைத்தார்.

இறுதியாக ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு , மரத்தின் பின் ஒளிந்து கொள்கிறார். ஆயுதம் பறிக்கப்பட்ட அவர் பிறகு மீண்டும் பாலத்தை நோக்கி நகர்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு