காணொளி: உங்கள் வாழ்வை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது எப்படி?
AI அல்லது சாட்ஜிபிடி, ஜெமினி, கோபைலட் போன்ற AI சாட்போட்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இவற்றில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தியும் இருக்கலாம். அவை அதிவேகமாக, மிகவும் வசதியானதாக தோன்றியிருக்கலாம்.
ஆனால், அது எப்படி இயங்குகிறது, உங்கள் தரவுகளை என்ன செய்கிறது எனச் சிந்தித்துள்ளீர்களா? செயற்கை நுண்ணறிவை உங்கள் வாழ்வை மேம்படுத்த எப்படி பயன்படுத்தலாம்?
Generative AI-களை முதலில் பயன்படுத்தும் ஒருவர் செய்வதெல்லாம்,
தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் அதனிடம் கேட்பதுதான். அப்படிச் செய்யும்போது சில தவறுகளை நீங்கள் கண்டறிய முடியும்.
AI சாட்போட்கள் அளிக்கும் தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் தரும் தகவல்களை ஈமெயில், பட்டியல் அல்லது ஒரு பத்தியாக சாட்போட்களால் மாற்ற முடியும்.
மீட்டிங்கில் நடந்தவை பற்றி எழுத வேண்டுமா?
உங்கள் குறிப்புகளை சாட்போட்டில் பேஸ்ட் செய்யுங்கள். அது, அந்தக் குறிப்புகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பத்திகளாக மாற்றிக் கொடுக்கும்.
மிகவும் சிக்கலான தரவுகள் குறித்து presentation தயாரிக்க வேண்டுமா?
சாட்போட் உதவியுடன் அதைச் செய்யலாம் அல்லது முதல் மாதிரி ஒன்றை உருவாக்கலாம். AI உதவியாளரால உற்பத்தித் திறனை
மேம்படுத்தவும் உதவ முடியும். சில குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்ட ஒரு வாரத்திற்கான உணவுத் திட்டத்தை உருவாக்குவது AI சாட்போட்களில் எளிது. அவற்றால் தனிநபருக்கான உடற்பயிற்சி திட்டத்தைக்கூட நொடிப்பொழுதில் செய்துவிட முடியும்.
ஆனால், AI தரும் பதில்களை மீது முழு நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது அவசியம்.
சாட்போட்களால் மருத்துவம், சட்டம் சார்ந்த அறிவுரைகளை சரியாக வழங்க முடியாது. அதற்கு உங்களுக்கு, உண்மையான ஒரு
வழக்கறிஞர் அல்லது மருத்துவர் தேவை.
அதோடு மிக முக்கியமான மற்றொரு விஷயம், நீங்கள் உள்ளிடும் தரவுகள் அனைத்துமே சேமிக்கப்பட்டு, சாட்போட் நிறுவனத்தால் பயன்படுத்தப்படலாம் என்பதாகும். எனவே, பிரைவசி பாலிசிகளை சரிபார்த்து, தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் முன்பாக எச்சரிக்கையுடன் நன்கு சிந்தித்துக் கொள்வது நல்லது.
மற்றுமொரு முக்கிய விஷயம் உண்டு. AI சாட்போட்கள் பதில்களை, அறிவுரைகளை உங்களுக்கு வழங்க அதிக ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. ஜென் AI தரவு மையங்கள் ஆண்டுக்கு 117 நாடுகளைவிட அதிகமான மின்சாரத்தை நுகர்வதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. எப்போதும் போல, புதிய தொழில்நுட்பத்தில் பலன்களும் விளைவுகளும் உள்ளன.
Generative AI சாட்போட்கள் அற்புதமான சாதனங்கள். அவை, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி வாழ்வை மேம்படுத்தக்கூடும். ஆனால், அதைப் பயன்படுத்தினால், சாமர்த்தியமாகப் பயன்படுத்துங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



