குரங்குகளை விரட்ட புலி பொம்மை; நிம்மதிக்கு வழிதேடும் கிராம மக்கள்

காணொளிக் குறிப்பு, குரங்குகளால் நிம்மதியை இழந்த கிராமம் - பொம்மை புலியால் துரத்தும் மக்கள்
குரங்குகளை விரட்ட புலி பொம்மை; நிம்மதிக்கு வழிதேடும் கிராம மக்கள்

தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் திம்மாபூர் மண்டலத்தில் உள்ள மன்னெம்பள்ளி கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அதனால் அவற்றை பயமுறுத்த கிராமவாசிகள் புலி பொம்மையை பயன்படுத்துகின்றனர்.

குரங்குகள் தவிர்த்து நாய்கள் தொல்லையும் மன்னெம்பள்ளியில் அதிகமாக உள்ளது. குரங்கு தொல்லையிலிருந்து தப்பிக்க தன் மகன் ஹர்ஷவர்தனை திம்மாபூரில் உள்ள தனியார் பள்ளியில் பெண் ஒருவர் சேர்த்துள்ளார். ஒருநாள், அவருடைய மகன் வந்த ஆட்டோ குறுக்கே நாய் வந்ததால் ஆட்டோ குப்புற கவிழ்ந்து அச்சிறுவன் உயிரிழந்தார்.

மன்னெம்பள்ளி போன்று பல கிராமங்களில் குரங்கு தொல்லை உள்ளது. இதைத் தடுக்க அதற்கென மீட்பு மற்றும் நிவாரண மையத்தை நிர்மல் மாவட்டத்தில் 2020ல் அரசு அமைத்தது. இங்கு குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன. ஆனால், மன்னெம்பள்ளியில் உள்ள குரங்குகள் பிடிக்கப்பட்டாலும், அருகிலுள்ள பகுதிகளிலிருந்து குரங்குகள் வருவதாக, மன்னெம்பள்ளி கிராம செயலாளர் முகமது ஆமீர் கூறுகிறார்.

செய்தியாளர்: பிரவீன் சுபம்

ஒளிப்பதிவு: பிரவீன் சுபம்&நரேஷ்

படத்தொகுப்பு: ராஜு ரொண்டாலா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு