மனிதனை போல பேசி பிரமிக்க வைக்கும் காகம் - வியப்பூட்டும் காணொளி

காணொளிக் குறிப்பு, மனிதர்களை போலவே பேசி ஆச்சர்யப்படுத்தும் காகம்
மனிதனை போல பேசி பிரமிக்க வைக்கும் காகம் - வியப்பூட்டும் காணொளி

காகத்தை கத்தி பார்த்திருப்போம். ஆனால், பேசி பார்த்திருக்கிறீர்களா? மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள இந்த காகம் மனிதர்களை போல பேசுகிறது.

பால்கர் மாவட்டத்தை சேர்ந்த மங்கல்ய முகானே என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காயம்பட்ட இந்த காகத்துக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அப்போதிருந்து இந்த காகம் அவரது குடும்பத்துடனேயே தான் வளர்கிறது.

இந்நிலையில், திடீரென கடந்த ஒரு மாதமாக இந்த காகம் பேசுவதாக முகானே தெரிவிக்கிறார். மராத்தியில் காக்கா, பாபா, ஆமி போன்ற வார்த்தைகளை, அதாவது மாமா, அப்பா போன்ற வார்த்தைகளை பேசுகிறது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு