காணொளி: பாஜக அலுவலகத்துக்கு தீ ; லே-யில் வன்முறைக்கு காரணம் என்ன?
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த இரண்டு வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, இன்று லே ஹில் கவுன்சில் கட்டடத்தின் மீது சில இளைஞர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளியான காணொளியில், பல வாகனங்கள் எரிவதையும், வன்முறை சம்பவங்களையும் காட்டுகின்றன.
லே-வில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது
மத்திய அரசுக்கும் லடாக்கின் பிரதிநிதிகளுக்கும் இடையே அக்டோபர் 6 ஆம் தேதி ஒரு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக PTI செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.



