காணொளி: பட்டுப்புழுக்களை கொல்லாமலேயே தயாரிக்கப்படும் 'கருணை' பட்டு

காணொளிக் குறிப்பு, காணொளி: பட்டுப்புழுக்களை கொல்லாமலேயே தயாரிக்கப்படும் 'கருணா பட்டு'
காணொளி: பட்டுப்புழுக்களை கொல்லாமலேயே தயாரிக்கப்படும் 'கருணை' பட்டு

பட்டுப்புழுக்கள் இல்லாமல் உங்களால் பட்டை தயாரிக்க முடியுமா? ஒடிஷா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பட்டுப்புழுக்களை சாகடிக்காமலேயே பட்டை தயாரிக்கின்றனர். வழக்கமாக, பட்டு இழைகளை பிரித்தெடுக்க, பட்டுப்புழு கூடுகளை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள பட்டுப்புழுக்கள் இறந்துவிடுகின்றன. ஆனால், ஒடிஷா அரசு 'கருணா' எனும் பட்டின் மூலம் தற்போது வித்தியாசமான அணுகுமுறையை கையாள்கிறது.

இந்த முறையின் மூலம் பட்டுப்புழுக்கள் கொல்லப்படாது. ஆனால், இம்முறையில் பல சவால்கள் உள்ளன.

நூற்பாலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. கருணா பட்டிலிருந்து நெய்யப்படும் புடவை இப்படித்தான் இருக்கும். இதன் விலை 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியாளர்: ராக்கி கோஷ்

தயாரிப்பு: ஷிவாலிகா பூரி

ஒளிப்பதிவு - படத்தொகுப்பு: டேனிஷ் ஆலம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு