You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை ஆனைமலையில் ஒளிரும் காளான் - இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வது ஏன்?
- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சியின் சில பகுதிகளில் ஒளிரும் காளான்களை மக்கள் பார்த்துள்ளனர்.
பகலில் வெள்ளை நிறத்தில் தோன்றும் அந்த காளான்கள், இரவில், ஈரப்பதமான சூழலில் நியான் பச்சை நிறத்தில் ஒளிரத்துவங்குகின்றன.
உயிரொளிர் (bioluminescence) உயிரினங்கள் அதிக அளவில் கடலில் இருப்பதாக பலர் நம்பினாலும் கூட, நிலப்பரப்பில் வாழும் உயிரினங்களும் நள்ளிரவில் ஒளிரக்கூடும் என்பதற்கு இத்தகைய காளான்களும் மின்மினிப்பூச்சிகளும் ஒரு நல்ல உதாரணமாக இருந்து வருகிறது.
வகைப்படுத்தப்பட்ட 1,20,000 பூஞ்சை வகைகளில், 100 பூஞ்சை வகைகள் ஒளிரும் தன்மை கொண்டவை என்று மோங்காபேயின் செய்தி குறிப்பிடுகிறது. அதில் வெகு சிலவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒளிரும் காளான்கள் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இங்கே, புகைப்படத் தொகுப்பில் உங்களுக்காக!
தமிழகத்தில் இது போன்று ஒளிரும் காளான்கள் தோன்றுவது முதல்முறையல்ல. ஏற்கனவே 2023-ஆம் ஆண்டில் கன்னியாகுமரியின் சில பகுதிகளில் இத்தகைய ஒளிரும் காளான்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அதன் பின்னாள் இருக்கும் பல சுவாரசிய மற்றும் வரலாற்றுத் தரவுகளையும் அப்போது பிபிசி தமிழ் செய்தியாக்கியிருந்தது. அது தொடர்பான முழுமையான செய்தியை நீங்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு