ரஷ்யா - யுக்ரேன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டம் என்ன? - காணொளி
ரஷ்யா - யுக்ரேன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டம் என்ன? - காணொளி
ரஷ்யா - யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியில் ரஷ்ய பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்திய நிலையில், இருநாடுகளும் ஒருவர் மீது ஒருவர் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.
கியவ் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் யுக்ரேன் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய 28 அம்ச சமாதான திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்ற நிலையில், இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



