மனிதர்களைப் போன்றே செடிகளைப் பயன்படுத்தி முதலுதவி செய்யும் சிம்பன்சிகள்

காணொளிக் குறிப்பு, முதலுதவிக்காக செடிகளைப் பயன்படுத்தும் சிம்பன்சி குரங்குகள்
மனிதர்களைப் போன்றே செடிகளைப் பயன்படுத்தி முதலுதவி செய்யும் சிம்பன்சிகள்

காட்டில் வாழும் சிம்பன்சி குரங்குகள் முதலுதவி செய்வதற்கு தாவரங்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளிகளும் வெளிவந்துள்ளன. இந்த அரிய நிகழ்வை பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

"சிம்பன்சிகள் பயன்படுத்தும் சில தாவரங்கள் காயங்களை குணப்படுத்த பயன்படுகின்றன. இது மனிதர்களின் மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றவை காயங்களை ஆற வைக்கும் தன்மையுடன் செயல்படுகின்றன. தொற்றுகளைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன" என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகததைச் சேர்ந்த எலோடி ஃப்ரேமன்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு