காணொளி: மும்பையில் மீண்டும் பழுதாகி நின்ற மோனோ ரயில்
காணொளி: மும்பையில் மீண்டும் பழுதாகி நின்ற மோனோ ரயில்
மும்பையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோனோரயில் மீண்டும் பழுதாகி பாதி வழியிலேயே பயணிகளோடு நின்றது.
செப்டெம்பர் 15-ம் தேதி காலை 7.16 மணியளவில் ஆண்டோப் ஹில் பேருந்து நிலையம் மற்றும் வாடாவில் உள்ள ஜிடிபிஎன் மோனோரயில் நிறுத்தம் இடையே ரயில் நின்றது.
45 நிமிடங்கள் கழித்து ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் மீட்கப்பட்டதாக மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கனமழைக்கு நடுவே இதே போல மோனோரயில் பாதிவழியில் பயணிகளோடு நின்ற நிலையில் கிரேன் உதவியோடு பயணிகள் மீட்கப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



