கூகுள் மேப்பை பின்தொடர்ந்து காருடன் ஓடைக்குள் விழுந்த பெண்

காணொளிக் குறிப்பு, காருடன் ஓடைக்குள் விழுந்த பெண்
கூகுள் மேப்பை பின்தொடர்ந்து காருடன் ஓடைக்குள் விழுந்த பெண்

நவி மும்பையில் கூகிள் மேப்பை பின்தொடர்ந்து சென்ற சொகுசு கார் ஒன்று ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூலை 25-ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச்சென்ற பெண் ஒருவர் பெலாபூர் ஓடை அருகே பாலத்தின் மீது செல்லாமல் பாலத்துக்கு கீழே சென்றதால் கார் ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. பிறகு கடலோர காவல் படை போலீசார் காரையும் பெண்ணையும் மீட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு