'போராட்டம் ஓயாது' - அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு கமலா ஹாரிஸ் பேச்சு
'போராட்டம் ஓயாது' - அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு கமலா ஹாரிஸ் பேச்சு
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஜனநாயகத்துக்கான போராட்டம் ஓயாது என்று பேசியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ஹொவார்ட் பல்கலைக் கழகத்தில், தேர்தல் தோல்விக்கு பிறகான தனது உரையில், பள்ளிகளையும் தெருக்களையும் துப்பாக்கி வன்முறையிலிருந்து காப்பாற்றும் முயற்சியை கைவிட மாட்டோம் என்றார்.
மேலும், "யாராக இருந்தாலும் அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒரு இருண்ட காலம் ஆரம்பிக்கப் போகிறது என்று பலர் அச்சப்படுகிறீர்கள், ஆனால் அப்படி பயப்பட வேண்டாம் என்றும் பல கோடி நட்சத்திரங்களின் ஒளியைக் கொண்டு நாம் நிரப்புவோம்" என்று தெரிவித்திருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



