காணொளி: சாட்ஜிபிடியின் புதிய ஏஐ பிரவுசர் - கூகுளுக்கு சவால் விடுமா அட்லஸ்?

காணொளிக் குறிப்பு, சாட்ஜிபிடியின் புதிய ஏஐ பிரவுசர்- கூகுளுக்கு சவால் விடுமா அட்லஸ்?
காணொளி: சாட்ஜிபிடியின் புதிய ஏஐ பிரவுசர் - கூகுளுக்கு சவால் விடுமா அட்லஸ்?

செயற்கை நுண்னறிவால் இயங்கும் அட்லஸ் எனும் புதிய வெப் பிரவுசரை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கூகுள் க்ரோம் போன்ற உலகின் பிரபலமான வெப் பிரவுசர்களுக்கு சவால்விடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சாட்ஜிபிடியை உருவாக்கிய OpenAI, செயற்கை நுண்ணறிவில் செய்த முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்திக் கொள்ளவும் புதிய வழிகளை தேடி வரும் நிலையில், தற்போது அட்லஸ் அறிமுகமாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், சாட்ஜிபிடி பயன்படுத்தும் வாராந்திர பயனர்கள் எண்ணிக்கை 800 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 400 மில்லியனாக இருந்ததாகவும் கூறினார்.

சரி, இதன் முக்கிய அம்சங்கள் என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு