வீடியோ: ராகுல் காந்தி சொல்லும் 'வாக்குத் திருட்டு' என்பது என்ன?
இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் இதனை விளக்கிய ராகுல் காந்தி தேர்தல்களில் "வாக்குத் திருட்டு" நடப்பதாகவும் கூறியிருந்தார்.
அதிலிருந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது
தேர்தல்களில் வாக்கு முறைகேடு நடைபெறுவதாகக் கூறி தேர்தல் ஆணையத்திடம் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தாங்கள் வென்றிருக்க வேண்டியதாக கூறி ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதியின் வாக்கு விவரத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டினார்.
கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியை அவர் குறிப்பிட்டார். இங்கு 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
ஐந்து வழிகளில் வாக்குத் திருட்டு நடப்பதாக ராகுல் காந்தி விளக்கினார்.
- போலி வாக்காளர்கள்
- போலி மற்றும் இல்லாத முகவரிகள்
- ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள்
- செல்லாத புகைப்படங்கள்
- படிவத்தின் 6-இன் தவறான பயன்பாடு
இந்த குற்றச்சாட்டு தொடர்பா தேர்தல் விதி 1960 20(3)(ஆ) பிரிவுப்படி, தான் சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டும், அல்லது அவர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



