காணொளி: பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்த பிரான்ஸ் - மக்ரோங் கூறியது என்ன?
ஐநா பொதுச் சபையில் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ், சௌதி அரேபியா இணைந்து பாலத்தீனம் தொடர்பாக நடத்திய ஒருநாள் உச்சிமாநாட்டில் பேசிய மக்ரோங், "நேரம் வந்துவிட்டது. மத்திய கிழக்கில் இஸ்ரேல், பாலத்தீன மக்களுக்கிடையிலான அமைதிக்காக எனது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க உறுதிப்பாட்டை மதித்து, பாலத்தீனத்தை ஒரு நாடாக இன்று பிரான்ஸ் அங்கீகரிக்கிறது என்று அறிவிக்கிறேன்."
"பாலத்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸூக்கும், யூத எதிர்ப்பு வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கும், ஸியோனிச எதிர்ப்பு கொண்டவர்களுக்கும் இஸ்ரேலை அழிக்க முயல்பவர்களுக்கும் ஏற்பட்ட தோல்வியாகும்.
ஒவ்வொரு பிரச்னையிலும் இறுதித் தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு இது அவசியமானது." எனத் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



