காணொளி: இந்திய அரிசி மீது புது வரி விதிக்க டிரம்ப் ஆலோசனையா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விவசாயிகளுக்கான நிதியுதவி தொகுப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியில் டிரம்பிடம் பேசிய கென்னடி ரைஸ் மில்ஸின் தலைமை செயல் அலுவலர் மெரில் கென்னடி, "கலிஃபோர்னியா அரிசி சந்தைக்கும், ஜப்பானுக்கும் செய்த உதவிக்கு அரிசி தொழில்துறை உங்களுக்கு மனதார நன்றி கூறுகிறது.
அது எங்கள் தொழிலுக்கு மகத்தானதாக இருக்கிறது.
ஆனால் தெற்கு பகுதியில் உள்ள நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
இது சாதாரண நெருக்கடி மட்டுமல்ல; சந்தை நிலைமைகள் நேராக போட்டியைக் குறைப்பது போல இருக்கிறது.
நீங்கள் இந்த வார இறுதியில் வெளியிட்ட செய்திகளோடு இது பொருந்துகிறது.
இப்போது சில நாடுகள் அமெரிக்காவுக்கு மிகக் குறைந்த விலையில் பெருமளவில் அரிசியை ஏற்றுமதி செய்வதாக நாங்கள் நம்புகிறோம்.
இவ்வளவு இறக்குமதியை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை." என்றார்.
அப்போது, எந்த நாடுகள் என டிரம்ப் கேட்டபோது, "இந்தியா, தாய்லாந்து, சீனா பியூர்டோ ரிக்கோவுக்கு அனுப்புகிறார்கள்.
பியூர்டோ ரிக்கோ ஒருகாலத்தில் அமெரிக்க அரிசிக்கான பெரிய சந்தையாக இருந்தது.
நாங்கள் பல ஆண்டுகளாக பியூர்டோ ரிக்கோவுக்கு அரிசி அனுப்பவே இல்லை." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



