இலங்கை: மர்மம் விலகாத மனித புதைகுழி - முல்லைத்தீவில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, இலங்கை: மர்மம் விலகாத மனித புதைகுழி - முல்லைத்தீவில் என்ன நடக்கிறது?
இலங்கை: மர்மம் விலகாத மனித புதைகுழி - முல்லைத்தீவில் என்ன நடக்கிறது?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக கடந்த 29ஆம் தேதியன்று ஒரு குழி தோண்டப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மாத்திரமன்றி, ஆடைகள் சிலவற்றையும் காணக்கூடியதாக இருந்தது என அந்த இடத்திலிருந்தவர்கள் கூறினர்.

இலங்கை: மர்மம் விலகாத மனித புதைகுழி - முல்லைத்தீவில் என்ன நடக்கிறது?

வீதியோரத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள், பெண்களின் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆடைகளில் பெண்களின் உள்ளாடைகள், விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடைகள் காணப்பட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று குறித்த பகுதி தோண்டப்பட்டதுடன், அதிலிருந்த எலும்பு எச்சங்களும் ஆடைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த எச்சங்கள் மூலம் என்ன தெரிய வந்துள்ளது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: