ஐசிசி டி20 உலகப்கோப்பை அரை இறுதிக்குள் நுழைந்துள்ள ஆப்கானிஸ்தான் - கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
ஐசிசி டி20 உலகப்கோப்பை அரை இறுதிக்குள் நுழைந்துள்ள ஆப்கானிஸ்தான் - கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுவது என்ன?

ஐசிசி டி20 உலகப்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

‘’இந்த வெற்றி, நாட்டில் உள்ள மக்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். எங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்’’ என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தனில் வெளியுறத்துறை அமைச்சர் மாவ்லவி அமிர் கான் மிட்டாகி, கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் ஆப்கானிஸ்தான் அணியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ’’ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உங்களது அரையிறுதிக்கான பயணம் அபாரமானது. இன்றைய வெற்றி, உங்களது கடும் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணம். உங்களது முன்னேற்றம் பெருமையாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.

முழு விவரம் காணொளியில்.

ஐசிசி டி20 உலகப்கோப்பை அரை இறுதிக்குள் நுழைந்துள்ள ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார்" என்றார் கேப்டன் ரஷித் கான்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)