தெலங்கானா: சந்திரசேகர ராவின் மக்கள் நல திட்டங்களால் அவருக்கு ஆதரவா? எதிர்ப்பா?
தெலங்கானா மாநிலத்தில் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் ஆட்சிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், இத்திட்டங்களால் பயனடையாதவர்களின் கோபத்திற்கும் அக்கட்சி ஆளாகியிருக்கிறது.
தற்போது சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதியின் ஆட்சி குறித்து பல கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும்கூட, கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்திய பல மக்கள் நலத் திட்டங்களும் சமூக பாதுகாப்புத் திட்டங்களும் அந்த அரசுக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. ஆனால், அதே நேரம் இத்திட்டங்களால் பயனடையாதவர்களின் கோபத்திற்கும் அக்கட்சி ஆளாகியிருக்கிறது.
விவசாயிகளுக்கான 'ரைத்து பந்து', முதியோருக்கான உதவித் தொகை அதிகரிப்பு, பட்டியலினத்தோருக்கான 'தலித் பந்து', வீடில்லாதவர்களுக்கு இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடுகளை அளிக்கும் திட்டம் போன்றவை பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றன. ஆனால், இத்திட்டங்களில் பலனடைந்தவர்கள், பலனடையாதவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அரசின் மீது அதிருப்தி இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



