கைகளே இன்றி வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற வீராங்கனை
கைகளே இன்றி வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற வீராங்கனை
காஷ்மீரை சேர்ந்த ஷீத்தல் தேவி, மாற்று திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் தங்கம் வென்றார். அவருக்கு பிறக்கும் போதே கைகள் இல்லை.
அவர் பிறந்த போது அவரது பெற்றோர்கள் மிகவும் கவலை கொண்டனர். அவர் வாழ்ந்த மலை பகுதியில் எங்காவது கீழே உருண்டு விடுவாரோ என்று அச்சப்பட்டனர்.
பள்ளிக் காலத்தில் தன் திறமைகளை வளர்த்துக் கொண்ட ஷீத்தல் இன்று இந்தியாவுக்கு ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



