காணொளி: செளதி அரேபியா - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் இந்தியாவை எப்படி பாதிக்கும்?

காணொளிக் குறிப்பு, செளதி அரேபியா- பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் இந்தியாவுக்கு சிக்கலா?
காணொளி: செளதி அரேபியா - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் இந்தியாவை எப்படி பாதிக்கும்?

செளதி அரேபியாவிற்கும், அணுசக்தி நாடான பாகிஸ்தானுக்கும் இடையே புதன்கிழமை பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

கத்தாரின் தலைநகரான தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ராணுவ மோதல் நடந்த சில மாதங்களுக்கு பிறகு, இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.

எனவே, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்று கருதப்படுவது மட்டுமல்லாமல், இது மேற்கு ஆசியா மற்றும் தெற்காசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் செப்டம்பர் 17 அன்று செளதி அரேபியா சென்றடைந்தார். செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஷெபாஸ் ஷெரீஃபிற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுமா?

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.