அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாட்டின் சுஹாஸ் சுப்ரமணியம் - யார் இவர்?
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாட்டின் சுஹாஸ் சுப்ரமணியம் - யார் இவர்?
அமெரிக்க வாழ் இந்தியரான சுஹாஸ் சுப்ரமணியம், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வர்ஜீனியாவின் ‘10th Congressional District’-க்கான பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிடுகிறார்.
சுஹாஸின் பூர்வீகம் தென்னிந்தியா. அவரது அப்பா தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அம்மாவின் சொந்த ஊர் கர்நாடகா. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான சுஹாஸ், முன்னாள் அதிபர் ஒபாமாவின் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராகப் பணியாற்றினார். 2019இல் வர்ஜீனியா மாகாணத்தின் செனேட்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிடும் அவர், பொருளாதாரம், சட்டரீதியாக குடியேறியவர்களுக்கான உரிமை, போன்றவற்றை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



