‘அவங்க பாசிசம்னா நீங்க பாயசமா?’ - தவெக மாநாட்டில் விஜய் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, ‘அவங்க பாசிசம்னா நீங்க பாயசமா?’ - விஜய் மாநாட்டில் பேசியது என்ன?
‘அவங்க பாசிசம்னா நீங்க பாயசமா?’ - தவெக மாநாட்டில் விஜய் பேசியது என்ன?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?,” என்றார்.

“இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார்.

“பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம், த.வெ.க, நடிகர் விஜய்

பட மூலாதாரம், TVK

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)