தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் ஏன்? அடுத்து என்ன நடக்கும்?
தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் ஏன்? அடுத்து என்ன நடக்கும்?
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்னை வியாழக்கிழமை மோதலாக வெடித்தது. இரண்டாவது நாளாகத் தொடர்ந்து வரும் இந்த மோதலில் இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
"இந்த மோதல் போராக மாறலாம்" என தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தாம் வெச்சயாசாய் (Phumtham Wechayachai) எச்சரித்துள்ளார். நூறாண்டுக்கும் மேலாக நிலவும் பிரச்னை மேலும் தீவிரமாகும் வகையில் இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.
மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த ஒரு சிறிய மோதல் தற்போது தீவிரமாகியுள்ளது.
சரி, இப்போது இந்த மோதல் தீவிரமானது ஏன்? விரிவாகப் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



