காணொளி: டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி, இந்தியா கேட் பகுதியில் டஜன்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, சுத்தமான காற்று பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு வயதுடைய ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது கட்டுப்பாடுகள் அமலில் உள்ள பகுதி, 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இங்கு கூட அனுமதி இல்லை என எச்சரித்த போலீஸார், போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்,
பின்னர் போராட்டக்காரர்கள் இந்தியா கேட் அருகே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை போலீஸ் அப்புறப்படுத்தியது.
கடந்த சில தினங்களாக டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



