காணொளி: காட்டுப்பகுதியில் முளைத்திருந்த ராட்சத காளான்கள்

காணொளிக் குறிப்பு, காட்டுப்பகுதியில் முளைத்திருந்த ராட்சத காளான்கள்
காணொளி: காட்டுப்பகுதியில் முளைத்திருந்த ராட்சத காளான்கள்

திண்டுக்கல் அருகே தொழிலாளிகள் பறித்த ராட்சத காளான்கள் பற்றிய காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளிகளான முத்துராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் தினமும் காலையில் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று உணவுக்காக காளான் பறித்து வருவது வழக்கம்.

இன்று காலை அவர்கள் அதே பகுதியில் காளான் தேடி சென்ற போது அங்கு ராட்சத காளான்கள் முளைத்திருந்ததை கண்டனர். அதனைத் தொடர்ந்து அந்த காளான்களை பறித்துச் சென்று எடை போட்டு பார்த்தபோது 13 கிலோ, 6 கிலோ மற்றும் 5 கிலோ எடையில் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு