பெங்களூரு கனமழை: 10 புகைப்படங்களில்

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பெங்களூருவில் கனமழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பல இடங்களிலும் சாலைகளில் முழங்கால் ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் வேலைக்குச் செல்பவர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

சாந்தி நகரில் உள்ள பிஎம்டிசி பணிமனையை இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேருந்துகளை வெளியில் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு