''எங்கள் மகள்களுக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டரில் டெல்லி செல்ல உள்ளோம்'' - அதிருப்தியில் பலாலி கிராமம்

காணொளிக் குறிப்பு, ''எங்கள் மகள்களுக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டரில் டெல்லி செல்ல உள்ளோம்''
''எங்கள் மகள்களுக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டரில் டெல்லி செல்ல உள்ளோம்'' - அதிருப்தியில் பலாலி கிராமம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஷ் பூஜன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிவந்தனர். கடந்த ஞாயிறன்று புதிய நாடாளுமன்ற திறப்பின் போது அக்கட்டடத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஹரியானாவில் உள்ள பலாலி கிராம மக்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய பிபிசி குழு நேரடியாக அங்கு சென்றது.

பலாலி கிராமத்தில் இருந்து வந்த வீராங்கனைகள் மல்யுத்த களத்தில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று பெருமைப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தங்கள் பெற்றோர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தங்களை இந்த விளையாட்டைக் கைவிடும்படி கூறுவதாகவும் கூறுகின்றனர் இங்குள்ள மகாவீர் போகாட் அக்ரா அகாடெமியில் பயிற்சி பெறும் இளம் வீரர்கள்.

பலாலி கிராமம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: