ஹமாஸ் இயக்கத்தை ஐ.எஸ் அமைப்புடன் ஒப்பிடுவது சரியா?
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸை ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் இஸ்ரேல் ஒப்பிடுகிறது. ஆனால் ஐ எஸ் அமைப்பு ஹமாஸை வெறுக்கிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் சிலரை கொன்ற போது, அவர்களின் உடல்களிலிருந்து ஐ எஸ் அமைப்பின் கொடி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறது. ஹமாஸும் ஐ எஸ் அமைப்பும் ஒன்று தான் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
ஆனால் ஐ எஸ் அமைப்பு ஹமாஸை காஃபீர் என்று முத்திரை குத்தியுள்ளது. அதாவது கடவுளை நிராகரிப்பவர்கள் என்று அர்த்தம். ஹமாஸ் அரசியல் காரணங்களுக்காக மதத்தை கையில் எடுத்துள்ளது என கூறி, ஹமாஸை எதிர்த்து போராட அறைகூவல் விடுத்திருந்தது. இரான் அரசின் பினாமியாக ஹமாஸ் செயல்படுவதாக குற்றம் சாட்டியது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



