சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட இளைஞரின் காலை கழுவிய மத்திய பிரதேச முதலமைச்சர் சொன்னது என்ன?

பட மூலாதாரம், SHIVRAJ SINGH CHOUHAN
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் இளைஞரிடம் ஒருவர் மனிதத்தன்மையற்ற வகையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் அவமதிக்கப்பட்ட இளைஞர் தஷ்மத் ராவத்தை தனது இல்லத்துக்கு அழைத்து அவரது காலைக் கழுவினார்.
வைரலான வீடியோவில், ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பாக சிறுநீர் கழித்த பிரவேஷ் ஷூக்லா மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், SOCIAL MEDIA
பழங்குடி இளைஞரின் காலை கழுவிய முதலமைச்சர்
இது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், பழங்குடி இளைஞர் தஷ்மத் ராவத்தை தனது இல்லத்துக்கு அழைத்து அவரது காலை கழுவியதுடன் அவருக்கு பணிவிடை செய்யும் காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
"வீடியோவை பார்த்தபோது எனக்கு வலித்தது. உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களைப் போன்றவர்கள் எனக்கு கடவுளைப் போன்றவர்கள்" என்று அப்போது தஷ்மத் ராவத்திடம் முதலமைச்சர் கூறியதாக ஏஎன்ஐ குறிப்பிட்டுள்ளது.
ரேஷன் பொருள்கள் கிடைக்கின்றனவா, குழந்தைகள் படிக்கிறார்களா என்பன போன்ற விவரங்களையும் தஷ்மத்திடம் முதலமைச்சர் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்.
உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் கூறுவதையும் அந்தக் காணொளியில் பார்க்க முடிகிறது.
வைரல் வீடியோ பற்றி ம.பி. முதலமைச்சர் என்ன சொன்னார்?
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதுமே, அந்த மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. இதையடுத்து, மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதேநேரத்தில், இரவில் அவர் ட்விட்டரில் பதிவு செய்த வீடியோவில், 'குற்றவாளி என்பவர் குற்றவாளி மட்டுமே. அவருக்கு சாதியோ, மதமோ, கட்சியோ கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதன் பிறகு பிரவேஷ் ஷூக்லா கைது செய்யப்பட்டதுடன், அவருடைய வீடு புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகின.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
குற்றவாளி பா.ஜ.க. பிரமுகர் என்று காங்கிரஸ் சாடல்
பிரவேஷ் ஷூக்லா என்கிற அந்த நபர் சித்தி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேதார்நாத் ஷூக்லாவின் முன்னாள் பிரதிநிதி என்று கூறப்படுகிறது.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழிக்கும் நபர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறப்படுவதாக தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிரவேஷ் ஷூக்லா பா.ஜ.க. தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹஃபீஸ் ட்விட்டரில் பதிவிட்டார்.
"பழங்குடி நலன் பற்றி தவறாகப் பேசும் பா.ஜ.க. தலைவர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரிய செயல்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில் "முதலமைச்சர் ஷிவ்ராஜ் அவர்களே, சித்தியில் இந்த சம்பவம் நடந்து 3 மாதங்களாகிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் இந்த பிரச்னையை எழுப்பிய பிறகே நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதுவரை உங்கள் அரசு தூங்கிக் கொண்டிருந்ததா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேதார்நாத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஹஃபீஸ் வலியுறுத்தினார்.
பிரவேஷ் ஷூக்லா பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டை அக்கட்சி மறுத்துள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. என்ன சொல்கிறார்?
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை கேதார்நாத் ஷூக்லா மறுக்கிறார்.
பி.டி.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "அவர் என்னுடைய பிரதிநிதி அல்ல. முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் என்னை அழைத்து இதுகுறித்து விசாரித்தார்" என்று கூறினார்.
"அவர் என்னுடைய பிரதிநிதியா என்று முதலமைச்சர் கேட்டார். இல்லை என்று நான் பதிலளித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட நபருடனான அறிமுகம் குறித்த கேள்விக்கு, அவர் தனது பகுதியில் வசிக்கிறார் என்பதால் அவரை தெரியும், என்னுடைய நிகழ்ச்சிகளுக்கு வருகை தருவார் என்றும் கூறினார்.
ஆனால், கேதார்நாத் ஷூக்லா பொய் சொல்வதாக சாடும் காங்கிரஸ், சில பத்திரிகைச் செய்திகளை ட்விட்டரில் பகிர்ந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
உத்தரபிரதேச மாநில சமாஜ்வாத் கட்சித் தலைவர் ஸ்வாமி பிரசாத் மவுரியா தனது ட்வீட்டில், "பிரவேஷ் ஷூக்லாவின் இந்த மனிதத்தன்மையற்ற செயல்தான் அவர்கள் கூறும் இந்து தேசத்தின் நிஜ முகமா? லவ் ஜிகாத் என்ற பெயரில் வெறுப்புணர்வை விதைத்தவர்கள் எங்கே கீழான செயலில் ஈடுபடுகிறார்கள் என்று பாருங்கள்" என்று குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கேதார்நாத் ஷூக்லா விளக்கம் அளித்துவிட்ட பிறகு, அவமானகரமான இந்த நிகழ்வை காங்கிரஸ் ஏன் அரசியலாக்குகிறது? என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நரேந்திரா சலுஜா கேள்வி எழுப்பினார்.
பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு மிரட்டலா?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
இதனிடையே, பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் வாக்குமூலம் என்று கூறப்படும் பிரமாணப் பத்திரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பிரவேஷ் ஷூக்லா அதுபோன்ற எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பிரவேஷ் ஷூக்லாவுக்கு எதிராக புகார் அளிக்குமாறு தனக்கு சிலர் அழுத்தம் கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர் கூறுவது போல அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்