காணொளி: FOMO - அதீத ஆர்வமே பதற்றமாக மாறும் இந்த நிலை பற்றி தெரியுமா?

காணொளிக் குறிப்பு, FOMO: எல்லாவற்றிலும் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வமே பதற்றமாக மாறும் பிரச்னை பற்றி தெரியுமா?
காணொளி: FOMO - அதீத ஆர்வமே பதற்றமாக மாறும் இந்த நிலை பற்றி தெரியுமா?

FOMO... அதாவது Fear of Missing Out.

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் நமக்கு ஏதாவது தெரியாமல் போய்விடுமோ அல்லது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் நம் பங்கு இல்லாமல் போய்விடுமோ என நமக்குள் ஏற்படும் ஒருவித பயம் தான் Fear of Missing Out அதாவது FOMO.

நாட்டு நடப்பு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவு செய்வதில் இருந்து நமக்கு பிடித்த நடிகர் ஊருக்கு வந்தால் அவரை பார்க்க வேண்டும் என நமக்குள் ஏற்படும் அதீத ஆர்வம் வரைக்கும் நாம் செய்யக்கூடிய பல விஷயங்களுக்கு FOMO காரணமாக இருக்கலாம்.

2004-ல் ஆக்ஸ்போர்டு அகராதியில் முதல்முறையாக இந்த வார்த்த பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தின்படி, அதீத ஆர்வத்தைத் தூண்டும் சுவாரஸ்யமான ஓர் நிகழ்வு நடக்கும்போது அதில் நாம் பங்கெடுக்க வேண்டும் என நமக்குள் ஏற்படும் ஒரு பதற்றம் அல்லது பயம் அதுதான் FOMO.

இது எப்போது ஆபத்தாக மாறுகிறதென்றால் ஓரிடத்திற்கு போனால் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும், பாதுகாப்பு குறைவாக இருக்கும் என தெரிந்தும் அபாயத்தையும் கடந்து அந்த இடத்துக்கு போகும்போது ஆபத்தாக மாறுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

நீங்களும் இந்த மாதிரி FOMO-வை உணர்ந்திருக்கிறீர்களா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு