பொது சிவில் சட்டம்: பா.ஜ.க.வுக்கு என்ன லாபம்?
பாரதிய ஜனசங்கம், 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, தனது தேர்தல் அறிக்கையில் முதன்முறையாக, `பொது சிவில் சட்டம்` என்பதைக் குறிப்பிட்டது.
ஜன சங்கம் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. எனினும், தேர்தல் முடிவுகள் ஜனசங்கத்துக்கு எதிராக வந்தது, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இதற்குப் பிறகு, 1967-1980 ஆண்டுகளுக்கு இடையில், இந்திய அரசியலில் காங்கிரஸ் பிரிவினை, 1971இல் இந்திய-பாகிஸ்தான் போர், இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை போன்ற சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன. இதனால் பொது சிவில் சட்டம் தொடர்பான விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி, 1980ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பிறகு மீண்டும் பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கை இடம் பெறத் தொடங்கியது. ஆனால் ஆட்சியமைத்த பின்னர் பாஜகவின் எந்த அரசும் (மோதி தலைமையிலான முதல் ஆட்சி உட்பட ) பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கவில்லை.
இந்நிலையில்தான், ஜூன் 28 அன்று பிரதமர் நரேந்திர மோதி முதன்முறையாக பொது சிவில் சட்டம் குறித்து விரிவாகப் பேசினார்.(முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



