அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: யார் வெற்றி என்பதில் குழப்பம் ஏற்பட்டது ஏன்?

காணொளிக் குறிப்பு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: யார் வெற்றி என்பதில் குழப்பம் ஏற்பட்டது ஏன்?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

17ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1000த்திற்க்கும் மேற்பட்ட மாடுகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 மாடுகளை பிடித்த முதல் பரிசு பெற்றார்.

இரண்டாவது இடத்தில் சிவகங்கை பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற இளைஞர் வெற்றி பெற்றார். ஆனால், மாடுகளை கணக்கு செய்வதில் தவறு நடந்துள்ளதாகவும், தான் தான் அதிக மாடுகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர். மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரங்களோடு வழக்கு தொடர போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் தான் கடந்த ஆண்டு அதிக மாடுகள் அடக்கி முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)