அரிய தாதுக்கள் - அமெரிக்க சீனா இடையே விவாதப் பொருள் ஆவது ஏன்?
அரிய தாதுக்கள் ஏற்றுமதியில் சீனா கட்டுப்பாடுகள் விதித்தது, சீனா -அமெரிக்க வர்த்தக மோதலில் புதிய திருப்பமாக இருந்தது.
அரிய தாதுக்கள் தொழில்நுட்ப உபரகணங்கள் தொடங்கி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் உள்ளன. அரிய தாதுக்கள் எனப்படுபவை உண்மையில், அரிதானவை அல்ல, அவற்றை பிரித்து எடுப்பது சவாலான வேலை. அந்த பணியில் 90% ஐ சீனா செய்து வருகிறது.
எனவே இந்த துறையில் குறிப்பிட்ட அளவுக்கான கட்டுப்பாட்டை சீனா கொண்டுள்ளது. அமெரிக்க வரிகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரிய தாதுக்கள் ஏற்றுமதியை இறுக்கியது.
அரிய தாதுக்களை பொருத்தவரை சீனாவை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா முயன்று வருகிறது.
வியாழக்கிழமை நடைபெற்ற டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பிலும் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் சீனாவிடமிருந்து "தடை" ஏதும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்புக்கு பின் தெரிவித்திருந்தார்.



