புதுச்சேரியில் 9 வயது சிறுமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு - கொந்தளித்த மக்கள் - நடந்தது என்ன? - காணொளி

காணொளிக் குறிப்பு, புதுச்சேரியில் 9 வயது சிறுமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு, கொந்தளித்த மக்கள்
புதுச்சேரியில் 9 வயது சிறுமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு - கொந்தளித்த மக்கள் - நடந்தது என்ன? - காணொளி

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது.

அச்சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து, புதுச்சேரியில் மக்கள் திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சிறுமிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இச்சம்பவத்தில் என்ன நடந்தது?

புதுச்சேரியில் 9 வயது சிறுமியின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு, கொந்தளித்த மக்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)