சிவகங்கை: மாடுகளைப் பராமரிக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய கேரவன்
சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரத்தில் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் பண்ணை உள்ளது.
இங்கு 20 வகையான நாட்டு மாடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார் காளை பராமரிப்பாளர் சேதுபதி.
இங்கு வெயில் காலங்களில் மாடுகளைப் பராமரிக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய கேரவன் பயன்படுத்தப்படுகிறது.
காளைகளுக்கு தன்னம்பிக்கை கொடுக்கவே கேரவன் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார் செந்தில் தொண்டமான்.
களத்தில் ஆக்ரோஷம் காட்டினாலும் யாருக்கும் தனது காளை பாதிப்பை ஏற்படுத்தியதில்லை என்றும் காளைகளுக்கு முறையான மருத்துவ வசதி செய்து தரப்படுவதாகவும் கூறுகிறார் சேதுபதி.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



