ஆஸ்கரை கைப்பற்றிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் - யார் இந்த கீரவாணி?
ஆஸ்கரை கைப்பற்றிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் - யார் இந்த கீரவாணி?

1990ல் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான எம்.எம். கீரவாணியை அதற்கு அடுத்த ஆண்டே மரகதமணி என்ற பெயரில் தமிழில் அறிமுகப்படுத்தினார் கே. பாலசந்தர். தமிழில் அவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 15க்குள்தான் இருக்கும் என்றாலும் சில மறக்கமுடியாத தமிழ்ப் பாடல்களைத் தந்திருக்கிறார்.
தமிழில் அறிமுகமான அழகன் படத்திலேயே தமிழ் திரைப்படப் பாடல் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தார் அவர். மரகதமணி இசையமைத்து தமிழில் வெளியான சில இனிமையான பாடல்களின் பட்டியலை இந்த காணொளியில் காணுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



