நைஜீரியா: தாயின் கனவை நிறைவேற்ற ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் பேட்மிண்டன் வீரர்
தொடர்ந்து இருமுறை ஒலிம்பிக்கிற்கு தேர்வான நைஜீரியாவின் முதல் பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அனுஒலுவபோ ஜுவோன் ஒபேயோரி.
"கனவு போல உள்ளது, கடந்த முறை தேர்வான போதே எனது ஆட்டத்தைப் பார்த்து மீண்டும் கூட உங்களை தேர்வு செய்ய விரும்புகிறோம் என கூட்டமைப்பு கூறியிருந்தது. இம்முறையும் சிறப்பாக ஆடி தேர்வாகியுள்ளேன். மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது" என்கிறார் ஜுவோன்.
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜுவோன், பல தடைகளைத் தாண்டி, 4 முறை ஆப்பிரிக்கன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தனது தாயும் ஒரு முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை என்பதால் இந்த விளையாட்டு தனது ரத்தத்தில் ஓடுகிறது என்கிறார்.
மேலும் விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



