காணொளி: தெலங்கானாவில் மாவோரி பழங்குடி நிகழ்ச்சிகள்
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பழங்குடி விழாவான மேடாரம் சம்மக்கா–சாரலம்மா ஜதாரா திங்கட்கிழமை (ஜனவரி 26) நடைபெற்றது. இவ்விழாவில் நியூசிலாந்தின் மாவோரி சமூகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அத்தோடு அவர்களின் பாரம்பரிய ஹக்கா நடனத்தையும் நிகழ்த்தினர். அந்நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் சீதக்கா கலந்து கொண்டார்.
தெலங்கானா தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கூற்றுப்படி, இந்த வருகை தெலுங்கானா–நியூசிலாந்து கலாச்சார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதி எனவும் உலகெங்கிலும் உள்ள பழங்குடி கலாச்சாரங்கள் எல்லைகள் மற்றும் மொழியைக் கடந்து காடுகள் மற்றும் இயற்கையுடன் ஆழமான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன எனவும் அமைச்சர் சீதக்கா தெரிவித்தார்.
போருக்கு முன் தங்கள் வீரர்களை அணிதிரட்டவும் எதிரிகளை அச்சுறுத்தவும் பாரம்பரியமாக மாவோரிகளால் நிகழ்த்தப்படும் நடனம் ஹக்கா என்று தெலங்கானா தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
பத்திரிகை தகவல் பணியகம் (PIB) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மேடாரமில் நடைபெறும் சம்மக்கா–சாரலம்மா ஜதாரா இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி விழாவாகக் கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



